• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோவதுடன் கையூட்டு பெறுகிறார்களா?

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோவதுடன் கையூட்டு பெறுகிறார்களா?

மட்டகக்ளப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை (13) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, உபதவிசாளர் த.டிசாந், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர்m திணைக்கள பிரதிநிதிகள்m சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸார் கசிப்பு தொடர்பில் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால் வவுணதீவு பொலிஸாரின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை.

கடந்த நாட்களில் உன்னிச்சை பகுதியில் கசிப்பு தயாரிப்பு இடங்களில் மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்மற்றும் இளைஞர் குழுக்களால் கைப்பற்றப்பட்ட கசிப்பு அழிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளை வவுணதீவு பொலிஸாரும் முன்னெடுக்க வேண்டும்.

வவுணதீவு பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி செய்பவரின் பெயரை பொலிஸாரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை. பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவலில் இரகசியத்தன்மை பேணப்படாமல் உரியருக்கு சென்றடைகிறது.

இந்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை காரணமாக இளம் சமூதாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மரண வீடுகளில் இளைஞர்கள் கசிப்புப் போதையில் முட்டி போதி திரிகிறார்கள்.

கரடியனாறு பகுதியிலிருந்து வவுணதீவு பகுதிக்கு மூடை மூடையாக சீனி கொண்டு செல்வதை நான் அடிக்கடி கண்டுள்ளேன். எதற்காக கொண்டு செல்கிறார்கள். வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுபடுத்த முடியாவிட்டால் நாங்கள் யாரிடம் முறைப்பாடு செய்வது. வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு திருப்பெரும்துறை ஊடாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த பிரதேசத்தில் சட்ட விரோத மணல் ஏற்றப்படு;ம் செய்ற்பாடும் நடைபெறுகிறது. இதன்காரணமாக கையூட்டு அல்லது தரகுப் பணம் பொலிஸார் பெறுகிறார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு கூட்டத்திற்கு வரும் பொலிஸார் 250 வழக்கு தாக்கல் செய்தோம் 300 வழக்கு தாக்கல் செய்தோம் என்று கூறுவதை தவிர்த்து கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்

பிரதேசத்தில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் அதனைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. சேதமடைந்துள்ள பாலங்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் விளக்கமளித்தார்.

பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத் தீர்மானங்களின் முன்னேற்ற நிலையும் மீளாய்வு செய்யப்பட்டது

Share the Post: