• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி 5ஆவது நாளாகத் தொடரும் நடைபவனி: நாளை கொழும்பைச் சென்றடைகிறது!

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி 5ஆவது நாளாகத் தொடரும் நடைபவனி: நாளை கொழும்பைச் சென்றடைகிறது!

பொதுபள சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலாகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்துக்கான நடைபவனி’ இன்று (14) புதன்கிழமை 5ஆவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் நிட்டம்புவை நகரிலிருந்து ஆரம்பமாகும் இந்நடைபவனி கடவத்தை நகரைச் சென்றடையவுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

  • 1ஆவது நாள் (ஒக்டோபர் 10): கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி கடுகன்னாவை வரை சென்றடைந்தது.
  • 2ஆவது நாள்: கடுகன்னாவையிலிருந்து புறப்பட்டு கேகாலை நகரை வந்தடைந்தது.
  • 3ஆவது நாள்: கேகாலையிலிருந்து ஆரம்பமாகி வரக்காபொல நகரைச் சென்றடைந்தது.
  • 5ஆவது நாள் (இன்று – ஒக்டோபர் 14): நிட்டம்புவையிலிருந்து ஆரம்பமாகி கடவத்தை நகரை சென்றடையும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.
  • நாளை (ஒக்டோபர் 15): 6ஆவது நாளான நாளை வியாழக்கிழமை இந்நடைபவனி தலைநகர் கொழும்பைச் சென்றடையவுள்ளது.
Share the Post: