கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டுப்போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார். பணிப்பாளருக்கு (14) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணப் பாரம்பரிய விளையாட்டுப்போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மறைந்து போகும் நமது பாரம்பரியங்களைப் பாதுகாக்க இது போன்ற முயற்சிகள் உதவும்




