1 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]

விசேட சோதனையின்  போது  125 பியர் போத்தல்கள் மற்றும் 12 அதிவிசேட   சாராய போத்தல்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த   36 வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் குறித்த இரகசிய தகவல்  சம்மாந்துறை பொலிஸாருக்கு  இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில்  சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் கைப்பற்றப்பட்ட  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாகவும்  அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும்  அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிநடத்தலிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில்  சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில்  ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால்
இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: