October 26, 2026

மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது-

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த  ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு மீனவர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு வழங்கியதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை

மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது- Read More »

மட்டக்களப்பு  கடற்றொழில் திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர்– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றச்சாட்டு–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் ஆசீர்வாதத்துடன் தான் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர் எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார்  தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடு வில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலையில்

மட்டக்களப்பு  கடற்றொழில் திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர்– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றச்சாட்டு– Read More »

கையால்  மணலை அகற்றி தேங்கிய மழை நீரை கடலுக்குள் திருப்பிய இளைஞர்கள்

Green field Condominium Management Committee – சமூகப் பொறுப்புடன் ஒரு முன்மாதிரி நடவடிக்கை [அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]அம்பாறை மாவட்டம் கல்முனை  பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பெய்த கடும் அடைமழை காரணமாக, கடற்கரைப் பகுதியில் பெருமளவிலான மழைநீர் தேங்கி கடலை நோக்கி வெளியேற முடியாமல் ஊருக்குள் பாயும் நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையைக் கண்ட ‘Green Field Condominium Management Committee’ அமைப்பைச் சேர்ந்த ஏ.பி.எம். தாரிக் ஆதம் பாவா ,

கையால்  மணலை அகற்றி தேங்கிய மழை நீரை கடலுக்குள் திருப்பிய இளைஞர்கள் Read More »

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு விஜயம்

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவில் (First Training Squadron – 1TS) அங்கம் வகிக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் (Tir), சுஜாதா (Sujata) மற்றும் இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பலான சாரதி (Sarathi) ஆகியவை 2026 ஒக்டோபர் 26 முதல் 28ஆம் திகதி வரை நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன. நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெறுவதுடன், சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகம் மற்றும்

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு விஜயம் Read More »

வீதியோரப் பாரிய மரங்களை அகற்றுதல் மற்றும் வடிகான்களைத் துப்பரவு செய்தல் குறித்து பொதுமக்கள் கோரிக்கை

எதிர்வரும் பருவமழை மற்றும் அனர்த்த காலங்களை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் பருவமழை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று மற்றும் சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது அவசியமாகியுள்ளது. வீதியோரப் பாரிய மரங்களை அகற்றுதல்

வீதியோரப் பாரிய மரங்களை அகற்றுதல் மற்றும் வடிகான்களைத் துப்பரவு செய்தல் குறித்து பொதுமக்கள் கோரிக்கை Read More »

இந்திய அரசின் நிதியுதவியுடன் கங்காராமய விகாரையில் பனை ஓலைச் சுவடிகளை இலக்கமயமாக்கும் SAMHiTA திட்டம் ஆரம்பம்

இந்திய அரசின் நிதியுதவியுடன், கொழும்பு கங்காராமய விகாரையில் பனை ஓலைச் சுவடிகளை இலக்கமயமாக்கும் SAMHiTA (தெற்காசியச் சுவடிகளின் வரலாறுகள் மற்றும் உரைக் காப்பகம்) திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. டெல்லியிலுள்ள இந்திய சர்வதேச நிலையம் (India International Centre – IIC), கொழும்பு கங்காராமய விகாரையுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. திட்டத்தின் ஆரம்ப நிகழ்விலும், விகாரை வளாகத்தில் இடம்பெற்ற கள ஆய்வு விஜயத்திலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டார். கங்காராமய

இந்திய அரசின் நிதியுதவியுடன் கங்காராமய விகாரையில் பனை ஓலைச் சுவடிகளை இலக்கமயமாக்கும் SAMHiTA திட்டம் ஆரம்பம் Read More »

 1 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]விசேட சோதனையின்  போது  125 பியர் போத்தல்கள் மற்றும் 12 அதிவிசேட   சாராய போத்தல்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த   36 வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் குறித்த இரகசிய தகவல்  சம்மாந்துறை பொலிஸாருக்கு

 1 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு Read More »

1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்

(கனகராஜா சரவணன்)  யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (25) நடைபெற்றது. இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில்,

1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம் Read More »