• Home
  • அரசியல்
  • நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (செப்டம்பர் 04) காலை முன்னெடுக்கப்பட்ட விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share the Post: