அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டியில், தேசிய அளவில் மூன்றாம் இடத்தினை கல்குடா கல்வி வலயம் சுவீகரித்துள்ளது. இதன் மூலமாக இப்பகுதி தனது கல்வி மற்றும் நிர்வாகத் திறனை மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் குறிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்கள் வெற்றிக் கிண்ணத்தையும் சான்றிதழையும் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.
கல்வித் துறையில் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வரும் கல்குடா கல்வி வலயத்தின் இந்தச் சாதனைக்கு அப்பகுதி கல்விச் சமூகத்தினரும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Views: 29



