இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மட்டக்களப்பு பொதுநூலகத்திற்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆதினத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதிப் புத்தகங்கள், 27.07.2026 இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரால் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் நூலக நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை பிரதி முதல்வர், உறுப்பினர்கள், தலைமை நூலகர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Post Views: 12




