• Home
  • ஆன்மிகம்
  • வெருகலம்பதி நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்.

வெருகலம்பதி நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்.

vadivel shagthivel

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை புதன்கிழமை(23.09.2026) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜையினைத் தொடர்ந்து இந்த பாத யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்,  பொதுச் செயலாளர் சாமித்தம்பி மதிசுதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இப்பாத யாத்திகர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி லெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது.

Share the Post: