• Home
  • உள்ளூர் செய்திகள்
  • நடுநிசியில் புகுந்து கொடூரத் தாக்குதல்: முல்லைத்தீவு பனிக்கன்குளத்தில் தம்பதி அடித்துக் கொலை!

நடுநிசியில் புகுந்து கொடூரத் தாக்குதல்: முல்லைத்தீவு பனிக்கன்குளத்தில் தம்பதி அடித்துக் கொலை!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் நித்திரையில் இருந்துள்ளனர். இதன்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெற்றோர் இருவரின் தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளனர்.

அவர்களின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள் சத்தமிட்டு கூக்குரலிடவே, அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்து வந்துள்ளனர். உடனடியாகப் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தீவிர விசாரணை:

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மாங்குளம் பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.

யார் இந்தத் தாக்குதலை மேற்கொண்டார்கள், கொலைக்கான பின்னணி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன

Share the Post: