கிண்ணியா பிரதேசத்தில் விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக இறுதியாக நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழ கூட்டத்தில் பேசப்பட்டு இணங்கியதற்கு அமைய கிண்ணியா பிரதேசத்தில் விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்கள்
பொலிசார் மற்றும் வன இலாகா துறையினரின் கெடுபிடி இன்றி சுதந்திரமாக தமது தொழிலினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக அத்தொழிலினை மேற்கொள்பவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர் எம்.எச். கனி அவர்களை சந்தித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.
Views: 63




