• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வாகன லீசிங் எல்லையை அதிரடியாகக் குறைத்தது மத்திய வங்கி: விலைகள் மேலும் உயரும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

வாகன லீசிங் எல்லையை அதிரடியாகக் குறைத்தது மத்திய வங்கி: விலைகள் மேலும் உயரும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், நிதி ரீதியான அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் (Leasing) வசதிகளின் எல்லைகளை இலங்கை மத்திய வங்கி நேற்று (மே 25) முதல் அதிரடியாகக் குறைத்துள்ளது. மத்திய வங்கியின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, உள்நாட்டில் வாகன இறக்குமதி மற்றும் விற்பனைத் துறை பெரும் சரிவைச் சந்திக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த புதிய திருத்தங்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனச் சந்தையை நேரடியாகப் பாதித்துள்ளன.

  • பயன்படுத்திய வாகனங்கள்: நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தக வாகனங்கள்: பாரவூர்திகள் (Trucks) உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட 70% லீசிங் வசதி, புதிய திருத்தத்தின்படி 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • தனிநபர் போக்குவரத்து வாகனங்கள்: சிற்றூந்துகள் (Cars), SUV ரக வாகனங்கள், வேன்கள் (Vans) மற்றும் முச்சக்கரவண்டிகள் போன்றவற்றுக்கு முன்னர் 50% ஆகக் காணப்பட்ட லீசிங் வசதி 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வாகனங்களை வாங்குபவர்கள் அதிகளவிலான முன்பணத்தை (Down Payment) செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், சந்தையில் வாகனங்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கடன் கடிதம் (LC) திறக்கப்பட்டு, இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான லீசிங் வசதிகளிலும் மத்திய வங்கி மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி:

  • பதிவு செய்யப்படாத கார், SUV மற்றும் வேன்களுக்கு 50% லீசிங் வசதியும், முச்சக்கரவண்டிகளுக்கு 25% லீசிங் வசதியும் மட்டுமே வழங்கப்படும்.
  • எனினும், இலகுரக ட்ரக் வண்டிகளுக்கு 90% ஆகவும், ஏனைய வர்த்தக வாகனங்களுக்கு 70% ஆகவும் லீசிங் வசதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் ஹைபிரிட் (Hybrid) வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சார வாகனங்களுக்கு (EV) சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மின்சார வாகனங்களுக்கான லீசிங் வசதி 90% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹைபிரிட் வகையைச் சேர்ந்த SUV, வேன் மற்றும் கார்களுக்கு 50% லீசிங் வசதி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.