• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்!

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்!

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்!

நாட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பதிவு இலக்கத்தகடுகள் (Number plates) அச்சிடும் பணிகள் இன்றைய தினம் (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெரஹேரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில், இன்று காலை 10.00 மணியளவில் இந்த பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, மோட்டார் வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தப்புள்ளியில் (Tender) ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதனையடுத்து, இப்பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் என்பன இணைந்து, கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டிருந்தன.

இலக்கத்தகடுகள் அச்சிடும் பணிகள் ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தமையினால், தற்போது அச்சிடப்பட வேண்டிய வாகன இலக்கத்தகடுகளின் எண்ணிக்கை 400,000 ஐக் கடந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், வான்கள் மற்றும் பேருந்துகள் (Buses) உள்ளிட்ட பல வாகனங்களின் விபரங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவு இலக்கத்தகடுகள் மாத்திரம் சுமார் 200,000 அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: