vadivel shagthivel
மைலத்தமடுவில் புதன்கிழமை(14.10.2026) இரவு மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள் வியாழக்கிழமை(15.10.2026) காலை துப்பாக்கிச் கூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு, மாதவனை மேச்சல் தரைப் பிரச்சனை மிக நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றி தொடர்கதையாகவே நகர்ந்த கொண்டிருக்கின்றது. இதனால் அப்பகுதியில் காலா காலமாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் அவர்களது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த 3 மினங்களுக்கு முன்னர்தான் மனித உரிமை ஆணைக்குளுவினர், சட்டத்தரணி, மனித உரிமை ஆர்வல்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அப்பகுதியக்கு நேரடி விஜயம் செய்து நிலமையை நேரில் பார்த்தறிந்திருந்ததோடு, பண்ணையாளர்களிடமும் கேட்டறிந்து கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை(14.10.2026) இரவு மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள் வியாழக்கிழமை(15.10.2026) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே எந்த அதிகாரிகள் என்னதான் செய்தாலும், எவ்வாறுதான் கதைத்தாலும், எமது மேச்சல்கரைப் பகுதியில் அத்துமீறி வெளி மாவட்டங்களிலிருந்து வந்து சட்டவிரோதமான முறையில் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து பயிற்செய்கையில் ஈடுபட்டுவருபவர்கள் இவ்வாறு துப்பாக்கிகொண்டு எமது வாய்பேச முடியாத பசுக்களை இவ்வாறு தினம் தினம் சுட்டுக் கொண்டே வருகின்றார்கள். நாங்கள் வாழ்வதா? எமது கால்நடைவளர்ப்பு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதா என தெரியாதுள்ளதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் அங்கலாய்க்கின்னறனர்.




