• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • முள்ளிபொத்தானை ஜாமியா நகரின் நிஸ்கோ வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

முள்ளிபொத்தானை ஜாமியா நகரின் நிஸ்கோ வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

A.H.HASFAR HASFAR

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் அமைந்துள்ள நிஸ்கோ வீதியானது பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாமல், மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வீதியை புனரமைப்புச் செய்து தருமாறு பல தடவைகள் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதமை தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது விசனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிரதேச சபையினால் பல வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்திற்கொண்டு நிஸ்கோ வீதியையும் புனரமைப்புப் பணிகளுக்குள் உள்ளடக்கி, விரைவாக புனரமைப்புச் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கின்றோம்.

Share the Post: