மட்டக்களப்பு மறை மாவட்ட நிதிப் பொறுப்பாளரும், பனிச்சங்கேணி புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தையுமான அருட்பணி M.ஸ்ரனிஸ்லோஸ் அடிகளாரின் விசேட அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, ஆலயத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினரை பங்குத் தந்தை மற்றும் ஆலய நிர்வாகிகள் வரவேற்றதுடன், அவர் ஆலய விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
மரியாதை நிமிர்த்தமான இச் சந்திப்பைத் தொடர்ந்து, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
குறிப்பாக, இன மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், பனிச்சங்கேணி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களின் கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Views: 133




