ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ப முள்ளிப் பொத்தானை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பயனாளிகளுக்காக முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட இரு வீடுகளுக்கான திறப்பு விழா இன்று (27) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் உட்பட ,சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீடுகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.
“சுவபஹசு நிவசக் – சவிபலாதி “எனும் திட்டத்தின் கீழ் இவ் வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.தலா 10இலட்சம் ரூபா செலவில் குறித்த இரு வீடுகளுக்கான நிதி வழங்கப்பட்ட நிலையில் பயனாளிகளினால் முழுமையாக பூரணப் படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
வாழ்வதற்கான வீடொன்றை வழங்குவதன் மூலமாக வீட்டு பிரச்சினைக்கான தீர்வாக எதிர்பார்க்கப்படுகிறது.








