திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அபூர்வ சத்திர சிகிச்சையின் போது, 3 கிலோ 100 கிராம் எடையுள்ள மிக நீளமான சிறுநீரக கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Dr. Pragalathan Balakrishnan) தலைமையிலான மருத்துவக் குழுவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) இச்சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.

பிரேசில் நாட்டில் கடந்த 2003 ஆம் ஆண்டு 1.9 கிராம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதே இதுவரை உலக சுகாதார நிறுவன அறிக்கைகளின்படி பதிவாகியிருந்த சாதனையாகக் கருதப்பட்டது. அதைவிட பல மடங்கு எடையுடைய (3.1 kg) கல் தற்போது இலங்கையில் அகற்றப்பட்டிருப்பது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபருக்கே இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இச்சாதனைச் சிகிச்சையில் டொக்டர் எம். எம். ரிஷ்லி, டொக்டர் ஜே. எம். இஹ்ஸான், டொக்டர் சீ. பிரகலாதன் ஆகியோருடன் மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கொடி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கெடுத்திருந்தனர்.




