• Home
  • ›
  • தொழில்வாய்ப்புகள்
  • ›
  • சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு: 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு: 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

இலங்கையின் சுகாதார அமைச்சு, 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்காக, தகுதியானவர்களிடம் இருந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் மற்றும் மேலதிக விபரங்கள் வருமாறு:

கற்கைநெறி விபரங்கள்:

தகைமைகள்:

  • க.பொ.த (உ.தர) பரீட்சையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அல்லது பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தோற்றிச் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  • சித்தியடைந்த ஆண்டுகள்: 2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் ஏதாவதொரு ஆண்டில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளம்: www.health.gov.lk
  • விண்ணப்பிக்க வேண்டிய முடிவுத் திகதி: 2026.06.30

கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000/= இனை இலங்கை வங்கிக்குச் சென்று செலுத்த வேண்டும்.
  • பணம் வைப்பு இயந்திரங்கள் (CDM) அல்லது இணைய வங்கிச் சேவை மூலமாகச் செலுத்தக்கூடாது.
  • நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால் சரிபார்ப்பதற்காக வங்கியிலிருந்து பெற்ற ரசீதைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

  • ஒரு விண்ணப்பதாரிக்கு ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவது அவசியம்.
  • விண்ணப்பத்தை முறையாகச் சமர்ப்பித்த பிறகு, அதன் பிரதியைத் தமது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பைத் தொடர்வதற்காகப் பதிவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கக் கூடாது.

மேலதிக விபரங்கள்: மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும். தொழில்நுட்ப உதவிகளுக்கு 0112 340 007 என்ற தொலைபேசி இலக்கத்தை அல்லது hrcodmeh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

Skip to PDF content
Skip to PDF content
Share the Post: