June 2, 2026

மட்டக்களப்பில் சின்னப்பொடியன் பார்த்த கடும் வேலை அவருக்காக கண்ணீர் சிந்தும் படித்தவர்கள் – ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம்.

மட்டக்களத்திலும் சின்னபொடியன் ஒருவன் கடுமையான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்காக தற்போது சிலர் அழுது கொண்டிருக்கின்றார்கள். படித்தவர்கள்கூட அழுகின்றார்கள். கருத்துக்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த கருத்துக்களை நாங்கள் முடக்ககூடாது, தடுக்கக்கூடாது, அந்த கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றாக காணப்படுகிறது. ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவதுதூண் எனவும் சொல்லப்படுகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிரோஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை

மட்டக்களப்பில் சின்னப்பொடியன் பார்த்த கடும் வேலை அவருக்காக கண்ணீர் சிந்தும் படித்தவர்கள் – ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம். Read More »

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி.

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? என சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் பொதுவாக பார்க்கின்ற பொழுது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லுகின்றார்கள். சட்டவாட்சி நடைபெறுகின்றது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற கருத்துக்கள் ஒரு பக்கமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கின்றன. அவை சில நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை எமது அரசியல் யாப்பை பொறுத்தவரையில் அரச மதம் பௌத்த மதம் என

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி. Read More »

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் போய்க் கொண்டிருக்கின்றது இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது – பா.உ. வைத்தியர் இ. சிறிநாத்.

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் ஒன்று போய்க் கொண்டிருக்கின்றது. இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. என் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமும் இளம் ஊடகவியலார்களுக்குரிய பயிற்சியும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(31.05.2026) மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் போய்க் கொண்டிருக்கின்றது இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது – பா.உ. வைத்தியர் இ. சிறிநாத். Read More »

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி, கதிரைகள் அன்பளிப்பு

கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்கத்தினால் பாடசாலை அலுவலகப் பாவனைக்கான கணனித்தொகுதி அன்பளிப்பும், எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்காக 50 கதிரைகள் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களினால் அன்பளிக்கும் நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் இன்று (02) எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி, கதிரைகள் அன்பளிப்பு Read More »

பிரஜா சக்தி திட்டத்துக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு 639.63 மில்லியன் ஒதுக்கீடு

*ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டங்கள் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில்_பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திராவால் அங்குரார்ப்பணம்  சமூக சக்தி(பிரஜா சக்தி) வேலைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில் இன்று (02) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவின் கள்ளிமேடு பகுதியில் விவசாய வடிகால் கால்வாய் திட்டம் சுமார் 1.5மில்லியன்

பிரஜா சக்தி திட்டத்துக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு 639.63 மில்லியன் ஒதுக்கீடு Read More »

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு: 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

இலங்கையின் சுகாதார அமைச்சு, 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்காக, தகுதியானவர்களிடம் இருந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் மற்றும் மேலதிக விபரங்கள் வருமாறு: கற்கைநெறி விபரங்கள்: தகைமைகள்: விண்ணப்பிக்கும் முறை: கட்டணம்: முக்கிய குறிப்புகள்: மேலதிக விபரங்கள்: மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும். தொழில்நுட்ப உதவிகளுக்கு 0112 340 007 என்ற தொலைபேசி இலக்கத்தை அல்லது hrcodmeh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு: 2026 ஆம் ஆண்டிற்கான மாணவ தாதியர் பயிற்சிக் கற்கைநெறிக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்! Read More »

புனாணையில் கோர விபத்து: முச்சக்கர வண்டி – டிப்பர் மோதியதில் பிறைந்துரைச்சேனை இளைஞன் பலி; மூவர் படுகாயம்!

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில், புனாணை 23 ஆவது இராணுவ முகாம் பகுதிக்கு அருகில் நேற்றிரவு (ஜூன் 01) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: பொலன்னறுவை பகுதியிலிருந்து ஓட்டமாவடி நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

புனாணையில் கோர விபத்து: முச்சக்கர வண்டி – டிப்பர் மோதியதில் பிறைந்துரைச்சேனை இளைஞன் பலி; மூவர் படுகாயம்! Read More »

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரை 60 கி.மீ வேகத்தில் வீசப்போகும் பலத்த காற்று – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு!

இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையோரப் பகுதிகள் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல், கடற்சார் சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதற்றத்தை ஏற்படுத்தும் வானிலை நிலவரம்: முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஒட்டுமொத்தக் கடல் பிராந்தியமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மிக மோசமான வானிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்கவுள்ளது. மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் (50-60 km/h)

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரை 60 கி.மீ வேகத்தில் வீசப்போகும் பலத்த காற்று – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு! Read More »

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் பாதை மீள் இயக்கம்: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையீடு!

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை இலங்கைக்குக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவியின் கீழ், 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சூறாவளிக்கு பிந்தைய ஒட்டுமொத்த மீட்புப் பொதியின் (Recovery Package) ஒரு பகுதியாக இந்த மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையான

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் பாதை மீள் இயக்கம்: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையீடு! Read More »

எரிபொருள் விலையேற்றத்தால் அதிர்ச்சி : இலங்கையில் பணவீக்கம் 7% வரை உயரும் என மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் (Inflation) 7% வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். இன்று (ஜூன் 02, 2026) அவர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இந்தத் தகவலை வெளியிட்டார். இது தொடர்பான முக்கிய அம்சங்கள் வருமாறு: தற்போது 5.5% மட்டத்தில் காணப்படும் பணவீக்கம், பின்வரும் காரணிகளால் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது:

எரிபொருள் விலையேற்றத்தால் அதிர்ச்சி : இலங்கையில் பணவீக்கம் 7% வரை உயரும் என மத்திய வங்கி எச்சரிக்கை! Read More »