• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிகளவு வளங்கள் ஒதுக்கப்படவுள்ளன – புதிய பணிப்பாளர் சுகுணன்.

சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிகளவு வளங்கள் ஒதுக்கப்படவுள்ளன – புதிய பணிப்பாளர் சுகுணன்.

vadivel shagthivel

சுகாதார அமைச்சினால் மருத்துவ பீடத்திற்குரிய பௌதிக வளங்கள் மற்றும் இருதய நோய்க்குரிய தொழில்நுட்ப  இயந்திரம் வசதி அவசர சத்திர சிகிச்சை புதிய கட்டிட வசதி என்பன மட்டக்களப்பு  வைத்திய சாலைக்கு வழங்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஐந்து தேசிய போதனை வைத்தியசாலைகளுக்குரிய புதிய வைத்திய பணிப்பாளர்கள் அண்மையில்  நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் வியாழக்கிழமை(04.11.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது அவருக்கு வைத்தியசாலை நிருவாகம் மகத்தான வரவேற்பளித்திருந்தது.

பதவியேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் பௌதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதுடன் பல மில்லியன் ரூபா செலவில் பெறுமதி மிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நோயாளர்களுக்குரிய தரமான வைத்திய சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மருத்துவ கூடமாணவர்களுக்கான கற்கை  முறைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

வைத்தியசாலையின் சகல ஊழியர்களுக்குமான செயற்பாடுகள்  மேம்படுத்தப்படவுள்ளத்துடன்  சுகாதார அமைச்சினால்  மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை இலங்கையின் சிறந்த வைத்திய சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மட்டு மாநகர சபையின்  முதல்வர் சிவம் பாக்கியநாதன், வைத்திய கலாநிதி தி.திருக்குமரன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் கல்முனை வடக்கு வைத்திய சாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமைபுரிந்த வைத்திய அதிகாரி ஜி.சுகுணன், சுகாதார அமைச்சர்னால்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: