• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சிறுபோக நெல் கொள்வனவு: விவசாயிகளுக்காக 6 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது அரசாங்கம்!

சிறுபோக நெல் கொள்வனவு: விவசாயிகளுக்காக 6 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது அரசாங்கம்!

விவசாயிகளிடமிருந்து தற்போதைய சிறுபோக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் 6 பில்லியன் ரூபாய் (600 கோடி) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலர்கள் ஊடாக இந்த நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை முறையான வகையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நியாயமான விலை:

தற்போதைய சிறுபோக அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தரகர்களின் சுரண்டல்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியைப் பயன்படுத்தி, விவசாயிகளிடமிருந்து தரமான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மாவட்ட மட்டத்தில் தயார்படுத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நெல்லுக்கு உரிய லாபகரமான விலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: