• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலாகாமத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலாகாமத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ எச் 

சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (27) தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இடம்பெற்றது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,முள்ளிப்பொத்தானை சமுர்த்தி வங்கி முகாமையாளர்,கருத் திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி மற்றும் அஸ்வசும நலன் புரி கொடுப்பனவு பெறும் 05 பயனாளிகளுக்கு சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்வாதார உபகரணங்களாக தையல் இயந்திரம்,குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தல், குடும்ப வருமானத்தை அதிகரித்தல் மற்றும் பயனாளிகள் தமது சொந்த முயற்சியால் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அரசாங்கம் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கப்படும் உபகரணங்களைப் பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி, தமது சுயதொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஊடாக குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

மேலும், சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களை வலுவூட்டுவதற்கும், அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவதற்கும் சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

இந்நிகழ்வின் ஊடாகப் பயனாளிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Share the Post:

Related Posts