பாறுக் ஷிஹான்
கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ சமுர்த்தி அபிமானி’ வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும் இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் அஷ் ஷெய்ஹ். சட்டத்தரணி. டீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ் ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன்
விஷேட அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம். அம்சார், கருத்திட்ட முகாமையாளர் எஸ்.எல் அஸீஸ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஐ.எல்.எஸ் ஹிதாயா, எஸ்.எஸ் பரீரா, எம்.ஏ.எம் பைசால், சிறுகைத்தொழில் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.ஏ. ஜலீல் மற்றும் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர் ஏ.எச்.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை கல்முனை பிரதேச செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




