கல்லூரியின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
பாடசாலை அதிபர் திருமதி வாசுகி சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய முறைப்படி கலைநயமிக்க கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றன. மேலும், மாணவர்கள் இணைந்து ‘சகலகலாவல்லி மாலை’ பாராயணம் செய்து அன்னை பராசக்தியின் அருளை வேண்டிப் பிரார்த்தித்தனர்.
சிறுவயதிலேயே மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆன்மீக நெறிகளை விதைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பக்தி உணர்வோடும் மிகுந்த உற்சாகத்தோடும் நிறைவுற்றது.


Views: 15




