• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கிழக்கு மாகாண கரம் சுற்றுப்போட்டி: மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய பெண்கள் அணி மாகாண மட்டத்தில் சாம்பியன்!

கிழக்கு மாகாண கரம் சுற்றுப்போட்டி: மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய பெண்கள் அணி மாகாண மட்டத்தில் சாம்பியன்!

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண மட்ட கரம் (Carrom) சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் / மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி மாகாண சாம்பியனாகத் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த வலுவான அணிகளை எதிர்கொண்டு, திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த மாகாண மட்ட வெற்றியைத் தொடர்ந்து, இவ்வணி அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்ட கரம் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டுள்ளது.

பாடசாலையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் மைல்கல்லாக அமைந்துள்ள இந்த சாதனைக்காக, வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Share the Post: