A.H.HASFAR HASFAR
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் மூன்றாம் நாளில் திருகோணமலை மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து சந்தித்தார்.
இதன்போது, பிரதேச மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தூதுவர் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்துக்கு விஜயம் செய்த அவர், அங்கு அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மரக்கன்றொன்றையும் நாட்டினார்.
பின்னர் மட்டக்களப்புக்கு சென்ற தூதுவர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து மட்டக்களப்பு Burgher Cultural Union பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் இலக்காகிய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் அவர் விஜயம் செய்தார்.
அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வாக, வரலாற்றுச் சிறப்புமிக்க டச்சு கோட்டைக்கு தூதுவர் விஜயம் செய்தார்.








