• Home
  • உள்ளூர் செய்திகள்
  • காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு கோலாகலம்!

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு கோலாகலம்!

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு, மன்றத்தின் உப தலைவர் கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காத்தான்குடி ஜாமிஆ ஹமீதிய்யா அறபுக்கலாபீட மாணவன் எச்.எம். ஷவ்கியின் கிறாஅத் ஓதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை பெண்கள் பிரிவு மாணவிகளின் கஸீதா நிகழ்ச்சி இடம்பெற்றது.

நிகழ்வின் கலை மற்றும் இலக்கிய அம்சங்களாக:

  • கவிதை: கவிஞர் எஸ்.எம்.ஏ. முபீன் (அபுமின்ஹாஜ்) கவிதை வழங்கினார்.
  • பேச்சு: இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை மாணவி செல்வி எம்.யூ.யூ. அத்ரி உரையாற்றினார்.
  • நாட்டாரியல்: வித்தியாகீர்த்தி எம்.எம். அமீர் அலி ‘நாட்டாரியல் இன்பம்’ எனும் விசேட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
  • நாடகம்: மாணவி செல்வி எம்.எப். மக்கியாவின் ஓரங்க நாடகமும், காத்தான்குடி கலை இலக்கியக் கழக செரன்திப் முஸ்தபா குழுவினரின் நாடகமும் அரங்கேற்றப்பட்டன.
  • இசை: செல்வன் கே. அஹமத் ஹஸன் மற்றும் செல்வன் கே. அஹமத் ஹுஸைன் ஆகியோர் இணைந்து பாடலொன்றை இசைத்தனர்.

நிகழ்வின் நன்றியுரையை மன்றத்தின் செயலாளரும் வித்தியாகீர்த்தியுமான எம்.எம். அமீர் அலி ஆற்றினார். காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ‘அவதானி மீடியா’ ஊடக வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் நவ இலக்கிய மன்றத்தின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சித்தீக், பொருளாளர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில், நிர்வாக சபை உறுப்பினர்களான கவிஞர் ஏ.பீ.எம். மீராசாகிபு, கலைஞர்களான எச்.எம். அப்துல் வாஹித், ஏ.ஜீ.எம். பழீல், பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். புஷ்பகீதா உள்ளிட்ட கலைஞர்கள், பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த ‘இலக்கியச் சரம்’ நிகழ்வானது பிரதி மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share the Post: