இந்த சம்பவம் (31) இரவு இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத பாதையின் 290 ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post Views: 36




