• Home
  • உலகச் செய்திகள்
  • ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்ய அமெரிக்கா ஒப்புதல்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்ய அமெரிக்கா ஒப்புதல்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

உலக நலன் மற்றும் ஈரானின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் பட்சத்தில் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முக்கிய உறுதிப்பாட்டில் இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படச் சம்மதித்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் மேலதிகமாகத் தெரிவித்துள்ளார்.

Share the Post: