• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு-

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு-

(கனகராஜா சரவணன்) 

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில்  மீன் பிடிக்க  சென்ற 19 வயது இளைஞனா மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல் போயுள்ள நிலையில் திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை  என உறவினர்கள்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். .

இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் காணாமல் போய்ய நிலையில் இன்று திங்கட்கிழமை கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.