செய்தி விவரம்:
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதி பாரிய வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அதில் ஒரு மோட்டார் சைக்கிள் வீதியில் தூக்கி வீசப்பட்டு கணப்பொழுதில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளதுடன், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து சாம்பலாகியது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த கல்முனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post Views: 36




