• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கப்பலடியில் முதலாவது ஹஜ் பெருநாள் கிரிக்கெட் தொடர்: பவர் ஹீட்டர்ஸ் அணி சாம்பியன்; பரிசுத்தொகை பாடசாலைக்கு நன்கொடை!

கப்பலடியில் முதலாவது ஹஜ் பெருநாள் கிரிக்கெட் தொடர்: பவர் ஹீட்டர்ஸ் அணி சாம்பியன்; பரிசுத்தொகை பாடசாலைக்கு நன்கொடை!

கப்பலடி இளைஞர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து, கப்பலடி வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் விசேட கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிகப்பாரிய உத்வேகத்துடன் சனிக்கிழமை (30) வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

கப்பலடி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரில் மொத்தம் ஐந்து உள்ளூர் அணிகள் மோதுவதற்கு களம் இறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டங்களின் முடிவில், இறுதிப் போட்டிக்கு யாசீர் தலைமையிலான பவர் ஹீட்டர்ஸ் (Power Heaters) அணி தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் எதிரணியை வீழ்த்தி, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாசீர் தலைமையிலான பவர் ஹீட்டர்ஸ் அணி, இத்தொடரின் முதலாவது “சாம்பியன்” என்ற மகுடத்தை சூடிக்கொண்டது.

வெற்றி பெற்ற பவர் ஹீட்டர்ஸ் அணிக்கு சாம்பியன் கிண்ணமும், 50,000/- ரூபா ரொக்கப் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது, விளையாட்டுத் துறைக்கு அப்பால் சமூக நோக்கோடு செயற்பட்ட பவர் ஹீட்டர்ஸ் அணியின் தலைவர் யாசீர், தமது அணிக்கு பரிசாகக் கிடைத்த 50,000/- ரூபா முழுத்தொகையையும் கப்பலடி பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்காக, அதே பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்வதாக மேடையில் அறிவித்தார். இவரின் இந்த நெகிழ்ச்சியான முடிவு அங்கிருந்த அதிதிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றது.

“இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை கப்பலடி கிராமத்தில் வெறும் ஒருமுறை மட்டும் நடாத்தாமல், தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளை கப்பலடி இளைஞர்களுடன் இணைந்து எமது பவர் ஹீட்டர்ஸ் அணி வீரர்களும் எதிர்காலத்தில் தீவிரமாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.”

இளைஞர்களின் இந்த ஒற்றுமையும், சமூகப் பொறுப்பும் கிராமத்தின் மத்தியில் விளையாட்டுத் துறையையும், மாணவர்களின் கல்வியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என கிராம மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share the Post: