ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானின் அணுவாயுத ஒழிப்பு மட்டுமே தற்போதைய முக்கிய இலக்கு என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் தந்திரோபாய நகர்வுகள் தீவிரமடைந்து, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலேயே, ஈரானின் அணுவாயுதக் கொள்கை குறித்த ட்ரம்பின் இந்த கடுமையான அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Views: 86




