• Home
  • Uncategorized
  • அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி!

அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி!

அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீச்சல் மற்றும் கராத்தே போட்டிகள், நேற்று (ஜூன் 07) அம்பாறை நகர சபை நீச்சல் தடாகத்திலும், உள்ளக விளையாட்டு மைதானத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, பெருமளவிலான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி நிகழ்வுகளில், பல்துறை சார்ந்த திறமையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றிக்கேடயங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இன்றைய போட்டிகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்த கட்டமான மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள அனைத்து வீர, வீராங்கனைகளும் மாகாண மட்டத்திலும் பெரும் வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என விளையாட்டுப் பிரியர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்

Share the Post: