காரைதீவிலிருந்து… “மகாநடிகை” இறுதிப் போட்டி வரை!

காரைதீவு மண்ணின் பெருமை நிவேதிகா இராசையா — “மகாநடிகை – Season 2” இன் 3வது Finalist! 🎉

இந்தியக் கலையரங்கில் காரைதீவு மண்ணிற்குப் பெருமை சேர்த்து “மகாநடிகை – Season 2” இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிவேதிகா இராசையாவிற்கு சுதர்சனம் செய்திகளின் வாழ்த்துகள்!!

கிழக்கிலங்கையின் காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. நிவேதிகா இராசையா, தனது விடாமுயற்சி, திறமை மற்றும் அசாத்தியமான நடிப்பாற்றலால், இந்தியாவின் பிரபல Zee Tamil தொலைக்காட்சியின் “மகாநடிகை – Season 2” போட்டியின் 3வது ஃபைனலிஸ்ட்டாக (Finalist) பிரம்மாண்டமாகத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்!

சிறு வயது முதலே பரதநாட்டியம் மற்றும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பயணித்த நிவேதிகா, இந்தியத் தொலைக்காட்சியின் முன்னணி மேடையில் வாரந்தோறும் தனது அசாத்திய மேடை ஆற்றலாலும், தத்ரூபமான நடிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Share the Post: