உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்யா நடத்திய கொடூரமான தாக்குதல்களுக்குப் பின்னர், அந்நகரத்தின் தற்போதைய கோர நிலையை வெளிப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை வீச்சுகள் காரணமாக கீவ் நகரிலுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளும், பொதுக்கட்டடிடங்களும் பலத்த சேதமடைந்து இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டு வருவதால், பொதுமக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக நிலத்தடி பதுங்கு குழிகளில் (Bunkers) தஞ்சம் புகுமாறு அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், தீவிரமான தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.







