இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில், மூதூர் பிரதேசத்தில் கால்பந்தாட்ட விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கான விசேட ஒருநாள் பயிற்சி முகாம் இன்று சனிக்கிழமை (23) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 20 முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த 240 மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, உதைப்பந்தாட்டத்தின் அடிப்படை உத்திகள், நுட்பங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இவ் விசேட பயிற்சி முகாமில் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் மூதூர் கிரிக்கெட் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள், மூதூர் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது.










