• Home
  • ஆன்மிகம்
  • மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி  ஆரம்பம் 

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி  ஆரம்பம் 

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, செப்ரம்பர் 6ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது

எதிர்வரும் செப்ரம்பர் 6ம் திகதி 7.00 மணிக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் 

பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும்

திருவிழா தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலய முன்றலில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் என். சத்தியானத்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

ஆயித்தியமலை பங்குத் தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் ,

செங்கலடி பங்குத் தந்தை

திக்கலஸ் யூட் மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை பொறுப்பு உத்தியோகத்தர் சுகாதார அதிகாரி, மின்சார சபை பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபையினர், உள்ளிட்ட துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

அன்னையின் பாதயாத்திரை வழமைபோன்று இவ்வருடமும் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து சனிக் கிழமை செப்ரம்பர் 05 ம் திகதி காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி வவுணதீவு ஊடாக அயித்தியமலைக்கும், அதேநேரம்  செங்கலடி சந்தியிலிருந்து காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி கரடியனாறு ஊடாக அயித்தியமலைக்கும் இரு வழியாக செல்லும் எனவும் அருட்  தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்

2 Attachments  •  Scanned by Gmail

Share the Post: