• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பியின் கோரிக்கை

மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பியின் கோரிக்கை

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (02)வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இதி்ல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் உட்பட பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான மதிப்பீடு மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு முக்கிய கவன‌ம் செலுத்தப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் பின்வரும் பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

கிளிவெட்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஆயுள்வேத மருத்துவமனையானது கடந்த 06 ஆண்டுகளாக கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இம் மருத்துவமனையை விடுதி வசதிகளுடன் அமைப்பதற்கு பிரதேச சபையினால் 2020 ஆம் ஆண்டில் காணி வழங்கப்பட்டிருந்தும் இதுவரை காலமும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை .

 இதனை விரைந்து அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்க ஆவணம் செய்யவும்.

 ஆசாத்நகர், பாரதிபுரம்,மேன்கமம்,சிவபுரம்,தெகிவத்தை,நீளாபளை,கங்குவேலி,லிங்கபுரம், கிளிவெட்டி ஆகிய ஊர்களில் உள்ள மக்கள் தமது வங்கி கணக்கில் பணத்தை இடவும் எடுக்கவும் பல மைல்கள் பயணிக்க வேண்டி உள்ளது. அவர்களது சிரமத்தை குறைக்கும் வகையில் மேற்குறித்த ஊர்களுக்கு நடுவில் அலமந்துள்ள கிளிவெட்டி பிரதேச  மருத்துவமனையில் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ATM மற்றும் CDM இயந்திரத்தை அமைத்து தர ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Share the Post:

Related Posts