• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சீனாவின் பொருளாதார மாதிரி இலங்கைக்குப் பாடம்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து

சீனாவின் பொருளாதார மாதிரி இலங்கைக்குப் பாடம்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து

சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதன் அபிவிருத்தி மாதிரியிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பல பெறுமதிமிக்க பாடங்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் திட்டங்களைச் சரியான முறையில் செயற்படுத்துவதில் சீனா கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள அவர், சீனாவின் சீர்திருத்தங்கள் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அந்நாட்டை உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது சீனாவில் கூட்டுச் செழிப்பையும் ஊக்குவித்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேவேளை, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அமைதியான ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கும் (SJB) சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC) இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.

Share the Post:

Related Posts