• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அம்பாறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்!

அம்பாறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்!

அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (18) அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (1) சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, பொதுமக்களுக்கு போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இப்பிரச்சாரம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts