பருத்தித்துறையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த நெல்லியடி பொலிஸார்!
பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இரு கொள்ளையர்களை, பொலிஸார் சினிமா பாணியில் துரத்தி மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை பகுதியில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென அவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். எனினும், சாமர்த்தியமாகச் செயற்பட்ட அங்கிருந்த பொதுமக்கள், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைக் குறித்துக்கொண்டு









