• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய வாகனங்கள்: இந்திய அரசாங்கம் அன்பளிப்பு!

பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய வாகனங்கள்: இந்திய அரசாங்கம் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புதிய பொலிஸ் வாகனங்கள், நாடு பூராவளுமுள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசினால் இந்த வாகனங்கள் அண்மையில் நிதியுதவியாக (Grant) வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்த புதிய வாகனங்கள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குக் கையளிப்பதற்காக, அந்தந்தப் பிரிவுகளுக்கு அமைய பிரிக்கப்பட்டு விநியோகிக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share the Post: