• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு–

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு–

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன். தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .

எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக அறிவித்தது அதன் ஆரம்ப நாள்  முதலாம் திகதியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சென்று ஆரம்பித்து வைத்தனர்

இதனை தொடர்ந்து மாவீரர் மாதத்தை முன்னிட்டு மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் உள்ள கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி  மாவீரர் மாதம் ஆரம்பித்து வைத்தனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை போராட்டத்தை குழப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு—கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்