• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கோவை சிறுமி தர்ஷினி படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் ஆறுதல்!

கோவை சிறுமி தர்ஷினி படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் ஆறுதல்!

கோயம்புத்தூர் — சூலூர் பகுதியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமையின் பின் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 10 வயதுச் சிறுமி தர்ஷினியின் குடும்பத்தினரை, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நைனா நாகேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் இல்லத்திற்குச் சென்ற மாநிலத் தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க உயர்மட்டக் குழுவினர், உயிரிழந்த சிறுமியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், சோகத்தில் மூழ்கியுள்ள பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர். அத்துடன், இக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தணடனை பெற்றுக்கொடுக்க கட்சி ரீதியாக முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த ஆறுதல் சந்திப்பின் போது, பா.ஜ.க-வின் சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் திரு. கோபிநாத், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ஹரிராமன் ஜி மற்றும் கட்சியின் மாவட்ட, மாநில, மண்டல முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் (Fast-track Court) மூலம் விசாரித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை போன்ற அதியுச்ச தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என இதன்போது பா.ஜ.க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share the Post: