தோழர் பத்மநாபாவின் 36 வது ஆண்டு தியாகிகள் தினம் தமிழர் சமூக ஜன நாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பணிமனையில் வெள்ளிக்கிழமை (19.06.2026) காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ளது என திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
இந்த தியாகிகள் தின நிகழ்வில் வடக்கு கிழக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Views: 84




