• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு ஆதரவு – திரு. குமார் ஜெயகுமரன்

பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு ஆதரவு – திரு. குமார் ஜெயகுமரன்

ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலை மாவட்ட,பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு அனுசரணையாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குமார் ஜெயக்குமாரன் பவுண்டேசனின் ஸ்தாபகர் திரு. குமார் ஜெயகுமரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கழகத்திற்கு (22) விளையாட்டு சீருடைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்குவது எமது சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். பெண்கள் பல்வேறு வகையான விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

“பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, எமது பகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைத்து வகையான விளையாட்டு நடவடிக்கைகளிலும் முன்னேறுவதற்கு ஆதரவளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெண்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்குவதும் எமது சமூகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது” என திரு. குமார் ஜெயகுமரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் தன்னால் இயன்ற ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Share the Post: