மூதூர் சுகாதார நிலையத்தின் வைத்திய அத்தியட்சகர் (DMO) வைத்தியர் எம். ஹஸ்ஸாலி அவர்களின் பங்கேற்புடன், மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த வைத்திய அத்தியட்சகர் எம். ஹஸ்ஸாலி அவர்கள், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், அவர்களுக்குரிய கௌரவங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
“இன்றைய மாணவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்புமே நாளைய சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்திய அத்தியட்சகர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவானது, மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






