தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில்  புதிய வீடு திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் –

 தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள பொற்கேணி கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக ரூபா 10 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்று பயனாளி குடும்பத்திற்கு இன்று (13)வழங்கி வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் ,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளருமான எஸ்.சுதாகரன் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வீட்டுத் தேவையையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய வீடு வழங்கப்பட்டமை மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டுத் தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கு இது உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: